வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா
வல்லை வெளி தாண்டிப் போகுமாMusic
நாளை ஒரு குண்டு தைத்து
நெஞ்சில் துளை போடக் கூடும்
ஆளைக் கொல்லும் நஞ்சைக் கூட
அள்ளித் தின்று சாகக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ
எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ
எந்த நிலை வந்து சேருமோ
எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ?
வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா
வல்லை வெளி தாண்டிப் போகுமாMusic
நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?
வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா
வல்லை வெளி தாண்டிப் போகுமாMusic
நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ
வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா
வல்லை வெளி தாண்டிப் போகுமா
இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா