ஆனந்தப் பூங்காற்று காதினிலே

ஆண்:-ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று
ஆனையிறவிலே ஏறிடும்போதிலே
ஆகா எம் கைகளில் ஆடுதம்மா
ஆகா எம் கைகளில் ஆடுதம்மா
பெண்:-உப்புக்கடலே உப்பளக்காற்றே
உம்மைத் தழுவுகின்றோம்
ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட
ஏனோ அழுகின்றோம்
ஆண்:-ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா

பெண்:-வேரிழந்து ஊரிழந்து ஓடிவந்தவர் -நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்
ஆண்:-போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் -எல்லை
படையாகிப் புலியோடு நின்றவர்
பெண்:-எம் தலைவா எங்களுடன் நின்று எடுத்தாய் -மீண்டும்
எங்கள் ஊரில் சென்றுவாழ தெம்பு கொடுத்தாய்
ஆண்:-ஆவிஉடல் யாவுமுமக் காகக்கொடுத்தோம் -தம்பி
அச்சமின்றி உம்மருகில் என்றுமிருப்போம்
ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா
Music
பெண்:-வாழ்வளித்த வன்னிமண்ணே உன்னைக் கொஞ்சவா -நாங்கள்
பட்டகடன் உந்தனுக்கு கொஞ்ச நஞ்சமா
ஆண்:-காலெடுத்து வந்தபகை வென்றவீரரே – உங்கள்
கையெடுத்து முத்தமிட கையைத் தாருமே –
பெண்:-மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம் -எங்கள்
ஊரிலேறி வந்தபகை யாவும் துடைப்போம்
ஆண்:-நாளை தமிழ் ஈழமென நம்பியிருப்போம் -அந்த
நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்
ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று
ஆனையிறவிலே ஏறிடும்போதிலே
ஆகா எம் கைகளில் ஆடுதம்மா
பெண்:-உப்புக்கடலே உப்பளக்காற்றே
உம்மைத் தழுவுகின்றோம்
ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட
ஏனோ அழுகின்றோம்
ஆண்:-ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *