தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

ஆண் :- தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்..
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

⟵⟶⟵⟶

பெண்:- நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை
ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்..

ஆண்:-தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

⟵⟶⟵⟶

ஆண்:- காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்..
ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையில்..
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்..
ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த வேளையில்
எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்
எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்
இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்..

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்..


தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது
நீ சென்ற இதம் சொன்ன பின்பு வெளி போட்டது
தென்றல் வந்து தொட்டு என்னை கேலி செய்தது
நீ சென்ற இதம் சொன்ன பின்பு வெளி போட்டது
காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்
காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்
என் கழுத்தில் மாலை ஆடும்


தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்..

தங்க மேனி நொந்து ஈழ தாயழுகின்றால்
என் தலைவன் இந்த நிலையை பார்த்து தானுகின்ரன்
தங்க மேனி நொந்து ஈழ தாயழுகின்றால்
என் தலைவன் இந்த நிலையை பார்த்து தானுகின்ரன்
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்
எதிரி ஆவி போகும் இல்லை தமிழீழம் வந்து சேரும்


தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்..

உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்
எம் உரிமைக்காக நானும் வந்து படையில் சேருவேன்
உன்னை நெஞ்சில் தூங்க வைத்து பாட்டு பாடுவேன்
எம் உரிமைக்காக நானும் வந்து படையில் சேருவேன்
வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை
வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை
வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம் இல்லை


தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்..
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
இவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்
இவள் வள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்


ஆண் பெண் தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *