கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்

கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்
காற்றிடை கலந்தவர் தானோ
கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்
காவியமானவன் தானோ
பொய்யாமொழியும் ரதனும் வரனும்
போனார் மீண்டும் வரவில்லை
மதனியும் விக்கியும் போயினர்
சுபாசும் எம்மிடம் வரவில்லை

Music
விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –

துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும் கரைந்ததது -பின்னர்
இடியினோடு பகைவன் ஏறும் கலங்கள் எரிந்தன

அழகுபூத்த எமது ஊரை அழிக்கநினைத்தவா -எம்மை
அகதியாக்கி தெருவினோரம் மழையில் நனைத்தவா

கடலின் புலிகள் உனது நகரை கலக்கிமுடித்தனர் -படைக்
கலங்கள் மூன்றை உடைத்தபோது உடலும் வெடித்தனர்

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
Music
தலைவன் வளர்த்த உறவை நினைத்து கடலில் குதித்தனர் -வெடி
தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர்

தமிழர்தேசம் எழுகஎழுக என்று ஆடினர் -எம்
தலைவன்பெயரை நிலவும்அறிய உரத்துப்பாடினர்

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
Music
அமைதியாக உறங்கும்நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்
அன்னைபூமி விடியும்வரைக்கும் எமக்கும் அது இல்லை

அமைதியாக உறங்கும் நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்
அன்னை பூமி விடியும் வரைக்கும் எமக்கும் அது இல்லை
கடலின்புலிகள் இருக்கும் வரைக்கும் எமக்குப்பயமில்லை -இங்கு
கரியபுலிகள் வெடிக்கும் திசையில் பகைக்கு ஜெயமில்லை

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும் கரைந்ததது -பின்னர்
இடியினோடு பகைவன் ஏறும் கலங்கள் எரிந்தன

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது –
துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *